ஈரோடு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைமை அலுவலக கட்டிடம் திறப்பு விழா!

November 26, 20210
258598925_264327635739055_5106797610352487285_n
260981827_264327579072394_4472506414756386119_n
259308452_264327595739059_8503572031700033388_n
கரூர் பைபாஸ்ரோடு பச்சப்பாளி சாலையில் அமைந்துள்ள ஈரோடு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைமை அலுவலக கட்டிடம் திறப்பு விழா காணொளி வாயிலாக மாநில தலைவர் திரு. கே. அண்ணாமலை அவர்கள் முன்னிலையில் தேசிய தலைவர் திரு. ஜெகத் பிரகாஷ் நட்டா ஜி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட புதிய பாரதிய ஜனதா அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி, கல்வெட்டினை தேசிய பொதுக்குழு உறுப்பினரும் நமது சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் திறந்து வைத்தார்கள்.
காணொளி வாயிலாக மத்திய அமைச்சர் திரு.எல். முருகன், சட்டமன்றக் குழுத் தலைவர் திரு.நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. வானதி சீனிவாசன், மாநில பொறுப்பாளர் திரு.சி.டி. ரவி, இணை பொறுப்பாளர் திரு.சுதாகர் ரெட்டி, முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மாநில பொருளாளர் எஸ். ஆர். சேகர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
விழாவிற்கு மாவட்ட தலைவர் எஸ். ஏ. சிவசுப்பிரமணி அவர்கள் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் தேசிய, மாநில, மாவட்ட, மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001