தங்க பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

February 21, 20220
274137357_317339873771164_4821334176261473691_n
273725553_317339830437835_1994059950746848597_n
ஓலப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி செல்வி.கோமதி நேபாள நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான “YOUTH GAMES INTERNATIONAL CHAMPIONSHIP 2022 “ல் சிலம்பப் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்று நமது நாட்டிற்கும்,நமது மண்ணிற்கும், சிலம்பக்கலைக்கும் பெருமை தேடித் தந்துள்ளார். இவர் ஏற்கனவே சிலம்ப விளையாட்டு போட்டியில் மாநில மற்றும் தேசிய அளவில் தங்க பதக்கமும், இளம் பயிற்சியாளர் என்ற பட்டமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நேற்றிரவு ஈரோடு திரும்பிய கோமதியை, நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் ரயில் நிலையத்தில் வரவேற்று சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நமது சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் அறம் அறக்கட்டளையின் முயற்சியினால், மாணவி நேபாள் சென்று போட்டியில் கலந்து கொள்ள 40 ஆயிரம் நிதியுதவி வழங்கிய தன்னார்வல தொண்டு நிறுவனமான ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் – 211 நிர்வாகிகளுக்கு நமது சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001